MONTHLY ONE BOOK (M1B) – மாதம் ஒரு புத்தகம்

புத்தக வாசிப்பினை பரவலாக்க “BOOKS FOR LIFE – MONTHLY A BOOK (M1B)” என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.


Terms & Conditions

  • 12 மாதங்களுக்கும் மொத்தமாகப் பணம் செலுத்துபவர்களுக்கு 10% கழிவுடன் ஒரு புத்தகம் இலவசம் (ஒரு மாதப் புத்தகத்தின் விலையில்) ஆண்டு இறுதியில் வழங்கப்படும். இவர்கள் YEARLY option ஐ தேர்வு செய்ய வேண்டும்.

    உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.200 என்ற கணக்கில் 12 மாதங்களுக்கு ரூ.2400/- ஐ கட்டி விட்டால், மாதந்தோரும் 10% கழிவுடன் ரு.200 மதிப்புள்ள ஒரு புத்தகம் (ஒரு மாதப் புத்தகத்தின் விலையில்) இலவசமாக 12வது மாதத்தில் வழங்கப்படும்.
  • 6 மாதங்களுக்கு மொத்தமாகப் பணம் செலுத்துபவர்களுக்கு 10% கழிவுடன் ஒரு புத்தகம் இலவசம் (ஒரு மாதப் புத்தகத்தின் பாதி விலையில்) 6வது மாதத்தில் வழங்கப்படும். இவர்கள் HALF YEARLY option ஐ தேர்வு செய்ய வேண்டும்.

    உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.300 என்ற கணக்கில் 6 மாதங்களுக்கு ரூ.1800/- ஐ கட்டி விட்டால், மாதந்தோரும் 10% கழிவுடன், ரு.150 மதிப்புள்ள ஒரு புத்தகம் (ஒரு மாதப் புத்தகத்தின் பாதி விலையில்) இலவசமாக 6வது மாதத்தில் வழங்கப்படும் .
  • 3 மாதங்களுக்கு மொத்தமாகப் பணம் செலுத்துபவர்களுக்கு 10% கழிவுடன் ஒரு புத்தகம் இலவசம் (ஒரு மாதப் புத்தகத்தின் கால்வாசி விலையில்) 3 வது மாத இறுதியில் வழங்கப்படும். இவர்கள் QUARTERLY option ஐ தேர்வு செய்ய வேண்டும்.

    உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.500 என்ற கணக்கில் 3 மாதங்களுக்கு ரூ.1500/- ஐ கட்டி விட்டால், மாதந்தோரும் 10% கழிவுடன் ரு.125 மதிப்புள்ள ஒரு புத்தகம் (ஒரு மாதப் புத்தகத்தின் கால்வாசி விலையில்) இலவசமாக 3வது மாதத்தில் வழங்கப்படும் .
  • மாதா மாதம் புத்தகம் வாங்க நினைப்பவர்களுக்கு 10% கழிவு மட்டும் கிடைக்கும். இவர்கள் MONTHLY option ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • M1B திட்டத்தில் MONTHLY option ஐ தேர்வு செய்தவர்கள் ஏதாவது ஒரு மாதம் ஒரு புத்தகமாவது வாங்கவில்லையெனில் அடுத்த முறை எப்போது வாங்குகிறீர்களோ அந்த முறை 10% கழிவு கிடைக்காது. தொடர்ந்து வாங்க ஆரம்பித்தவுடன் 10% கழிவு கிடைக்கும்.
இவையாவும் வாசிப்பை ஊக்கப்படுத்தவும் விரிவு படுத்தும் நோக்கிற்காகவும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது...

Create New Account

Already you have an account? Sign In

திட்டச்செயல்பாடு:

  1. இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர், இவ்விணைய தளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களோடு பதிவு செய்து கொண்டால், வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10% கழிவுண்டு, வருடம் முழுவதும். குறைந்தபட்சம் மாதம் ஒரு புத்தகமாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று புத்தக வாசிப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த 10% கழிவை அளிக்கிறோம்.
  2. உங்களுக்குத் தெரிந்தவர்களை இதில் சேரச் செய்து உங்களைப் போல் பயன்பெறச் செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் உங்களது USER NAME & PASSWORD கொடுத்து 10% கழிவுடன் புத்தகங்கள் வாங்கிப் பயன்பெறச் செய்யலாம்.
  3. ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் – நீங்களே தேர்வு செய்து இவ்விணைய தளம் மூலம் எங்களுக்குத் தெரிவித்தால், கூரியர் / அஞ்சல் மூலம் நீங்கள் கூறும் முகவரிக்கு அனுப்பப்படும்.
  4. வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியது உறுதியானவுடன் உடனே உங்களுக்கு புத்தகம் வந்து சேரும்.
  5. இத்திட்டச் செயல்பாட்டினை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துப் பயனடைய வேண்டுகிறோம். பிறந்த நாள் / திருமணநாள் பரிசாக, ஏழைப் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக, அனைத்து விழாக்களிலும் பொன்னாடை/பூமாலைகளுக்குப் பதிலாக, திருமணம் மற்றும் இதர வீட்டு விஷேசங்களில் பிற பரிசு பொருள்களுக்குப் பதிலாக, பள்ளி-கல்லூரி விழாக்களில் பிற பரிசு பொருள்களுக்குப் பதிலாக, அம்மா-அப்பா- மற்ற குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து கொடுக்க, நமது பழைய ஆசிரியர்களைக் காணும் போது பரிசளிக்க ”புத்தகங்கள்” மிகச் சரியான தேர்வாகும்.

உங்கள் புத்தகப் பரிசு காலம் கடந்தும் பேசப்படும் நினைவுப் பொருளாகிவிடும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் உருவாகட்டும்! அறிவுள்ள சமூகமாக மாற்றி அமைக்க நல்லதோர் வாய்ப்பு – மாதந்தோறும் ஒரு புத்தகம் வாங்கும் பழக்கம்.