• darkblurbg
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg

வாசிப்புலகம் இணைய தளத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்களை பேரன்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன்.

வாசிப்பை நேசிப்போம்! மனித வாழ்வை மேம்படுத்துவோம்!!

இது தான் இவ்விணைய தளம் உருவாகக் காரணம். நம்மை யாரென்று நாமே அறியும் தேடலே நமது வாழ்க்கை. அந்த அறிவுத் தேடலுக்கு பெரிதும் துணை நிற்பவை புத்தகங்கள். வாசித்தல் என்பது நம்மை புதிய உலகிற்கு இட்டு செல்லும் ஓர் மந்திரம். நம்மை வழிநடத்துபவை புத்தகங்களே!. நல்ல புத்தகங்கள் நம் வாழும் தரத்தை மேம்படுத்துகின்றன.

நாம் தோல்வியால் வாடும் போது புத்தகங்கள் நம்மைத் தேற்றுகின்றன; ஆசுவாசப்படுத்துகின்றன ஒரு நல்ல நண்பனைப் போல். மிகுந்த வலிமையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வை வழிநடத்த நல்ல புத்தகங்கள் கற்றுக் கொடுக்கின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டி மானுட வாழ்க்கையின் மகத்துவங்களை அறிய ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அவற்றை வாசிக்கவும் நேசிக்கவும் தவறாதீர்கள். நல்ல புத்தகங்கள் ஒரு நல்ல நண்பன், ஒரு நல்ல ஆசான், ஒரு நல்ல வழிகாட்டி.

பரந்துபட்ட வாசகன் ஒரு கலாச்சாரத்தின் அடையாளம். அறிவியல், கவிதை, நாடகம், சுயசரிதை, வரலாறு, விமர்சனம், விளையாட்டு, நாவல், சிறுகதை, சுயமுன்னேற்றம், பகுத்தறிவு, தொழில்நுட்பம், மருத்துவம், சிறுவர் புத்தகம் மற்றும் எண்ணற்ற வகைகளில் புத்தகங்கள் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன.

புத்தகம் வாசித்தல் - ஒரு வரம் என்பதற்கு நகுலனின் ஒரு கவிதை. “ஏய் வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!” எதையெல்லாமோ நாம் தொலைத்தோமோ அதையெல்லாம் இப்போதும் தேடித்தருவது புத்தகங்களே. புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து என்கிறார் மூளையியல் விஞ்ஞானி சூசன் கிரின்பீல்ட் ( Susan Greenfield).

புத்தகம் வாசித்தல் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், அறிவுசார் சொத்துக்களை பாதுகாக்கும் விதமாகவும், புரிதல் அறிவை மேம்படுத்தும் விதமாகவும், உலகம் முழுமைக்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதன் மூலமாக மனிதர்களிடம் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவ யுனெஸ்கோ அமைப்பினால் ஏப்ரல்-23 நாள் புத்தக தினமாக அறிவிக்கப்பட்டு 1995-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் புத்தக தினம் (ஏப்ரல்-23) அன்று கொண்டாடப்படுகிறது.

நாம் முன்னேறி வந்து கொண்டே இருந்தாலும் முன்னே நடந்ததை திரும்பி பார்க்க புத்தகங்கள் உதவும் அதனால் தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என்று விரும்புகின்றோம். இதனை நம் பழம்பாடல் ஒன்று தெளிவுபடுத்துகிறது பாருங்கள் –

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றழிற் காழ்இனிய தில் – இனியவை நாற்பது

வாசிக்கப் பழகுவோம். அதனால் நம்முள் திறமைகள் மிகும். அவை நம்மிடையே பெரிய மாறுதலை தோற்றுவிக்கும். வாசிப்போம் – நேசிப்போம் – அறிவுடை சமுதாயம் படைப்போம்.

பேரன்புடன்

குரு. மணிகண்டன்

MONTHLY ONE BOOK (M1B)
மாதம் ஒரு புத்தகம்

Register Login

Latest Books

புத்தகம் வாசித்தல் - ஒரு வரம் என்பதற்கு நகுலனின் ஒரு கவிதை. “ஏய் வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!”

Popular Books

Latest Updatesமாதம் ஒரு புத்தகம் (M1B)

வாசிப்பை நேசிப்போம். வாசிக்கும் பழக்கம் பெருமளவில் தொடர்ந்தால் மட்டுமே நல்லதொரு சமுதாயம் மலரும். நாமும் நம்மைச் சுற்றி இருப்போரும் வாசிப்பை அன்றாடக் கடமையாகக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம். குறைந்தபட்சம் மாதம் ஒரு புத்தகம் வாங்கிப் படிப்பேன் – என்னைச் சார்ந்தோரையும் படிக்க வைப்பேன் என்று சபதமேற்கிறேன் என்போர் இன்றே வாசிப்புலகத்தின் ”மாதம் ஒரு புத்தகம்” (M1B) திட்டத்தில் சேரலாம். மேலும் விபரங்கள் உள்ளே. மிக்க நன்றி.

ALT